/* */

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரிக்கை

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று வெம்பாக்கம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரிக்கை
X

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக்குழுத் தலைவர் மாமண்டூர் டி.ராஜி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் நாகம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் ப.பரணிதரன், ஏ.கோபாலகிருஷ்ணன், என்ஜினீயர் ஜி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்பது உள்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், 'ஒன்றியத்திற்காக ஒதுக்கப்படும் பொது நிதியில் இருந்து எந்தவித வளர்ச்சி திட்டப்பணிகளும் மேற்கொள்ளாமல் மொத்த பணத்தையும் டெங்கு காய்ச்சல் காரணம் காட்டி செலவிடுவது எந்தவிதத்தில் நியாயம். மஸ்தூர் பணியாளர்கள் கிராமங்களில் பணியாற்றினால் கிராம பஞ்சாயத்து நிதியில் இருந்து செலவு செய்ய வேண்டும்.

இனிமேல் ஒரு ரூபாய் கூட டெங்கு பணி என்று கூறி பொது நிதியில் இருந்து பணம் எடுக்கக்கூடாது. கிராம சபை கூட்டங்களுக்கு ஒன்றிய கவுன்சிலர்களை அழைப்பதில்லை. பஞ்சாயத்துகளில் பசுமை வீடு வழங்குவதில் பயனாளிகள் தேர்வு செய்யப்படும் போது ஒன்றிய கவுன்சிலர்களுடன் கலந்து ஆலோசிப்பதில்லை. 100 நாள் திட்டப்பணிகளின் வேலை நேரத்தை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டது.

Updated On: 10 March 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!