கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
X

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள்

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. மாநில செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் ஏழுமலை, பொருளாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், 569 பேரும் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மாவட்ட தலைவர் ரமேஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது செய்யாறு வட்டம், மேல்நகரம்பேடு வருவாய் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் கண்ணா மீது, செய்யாறு உதவி கலெக்டர் விசாரணையின்றி வழங்கப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!