பெண்ணிடம் பாலியல் சில்மிஷம், வேன் டிரைவர் கைது!

பெண்ணிடம் பாலியல் சில்மிஷம், வேன் டிரைவர் கைது!
X
பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கிராமத்தைச் சேர்ந்த 43 வயது பெண், வீட்டிலேயே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மனோகர் வேன் டிரைவர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையில் பெண் தனியாக இருந்தபோது, அங்கு வந்த மனோகர் திடீரென அவரிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டதும் மனோகர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் வாணாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வேன் டிரைவர் மனோகரை கைது செய்தார். பின்னர், அவரை தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெண் கைது

செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் 444 மதுபாட்டில்கள், பைக்கை பறிமுதல் செய்ததோடு அவரது மகனை தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தூசி காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, வெங்கடேசன் மற்றும் போலீசார் சிவபெருமாள், பச்சையப்பன், ரேணுகா ஆகியோர் அடங்கிய குழுவினர் அழிஞ்சல்பட்டு கிராமத்திற்கு சென்றனர்.

தொடர்ந்து, தகவல் கிடைத்த வீட்டில் சோதனை செய்துபோது, வீட்டின் பின்புறம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூபாய் 62 ஆயிரம் மதிப்பிலான 420 குவாட்டர் மதுபாட்டில்கள், 24 பீர்பாட்டில்கள் மற்றும் அங்கிருந்த பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், மது விற்பனையில் ஈடுபட்ட அஜ்மல்கான் மனைவி மதினா என்பவரை கைது செய்தனர். விசாரணையில், மதுபாட்டில்களை டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும், போலீசை பார்த்ததும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள மதினாவின் மகன் ஷாருக்கானை தேடி வருகின்றனர். இதுகுறித்து தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து மதினாவை செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு