திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய உதயநிதி
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது;
ஆரணி பாராளுமன்ற வேட்பாளரும் இந்தியா கூட்டணியின் சார்பாக போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் கலைஞரின் ஆசி பெற்றவர், முதல்வரின் அன்பைப் பெற்றவர், உங்களின் ஆதரவை பெற்ற வேட்பாளர் தரணி வேந்தன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.
வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடக்கும் தேர்தலில் வெற்றி சின்னம் உதயசூரியன் சின்னத்தில் தரணி வேந்தனை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கப் போவது உறுதி. தாய்மார்கள் முடிவை யாரும் நினைத்தாலும் மாற்ற முடியாது. கடந்த தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது ஒருங்கிணைப்பு குழுவில் பேசி 25 வருடங்களுக்குப் பிறகு திமுகவுக்கு ஆரணி மக்களவைத் தொகுதி பெற்று தந்துள்ளோம்.
நீங்கள் அனைவரும் செய்யாரை தலைமை இடமாக கொண்டு மாவட்டமாக அறிவிக்கும் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளீர்கள். வாய்ப்பு கொடுங்கள் உங்கள் வாக்குறுதிகளை தலைவரிடம் சொல்லி ஒவ்வொன்றாக நிறைவேற்றுவது எங்கள் கடமை. அதற்கு உங்கள் கடமையை செய்ய வேண்டும் .அதற்கு நீங்கள் எத்தனை லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் திமுக வேட்பாளரை ஜெயிக்க வைப்பீர்கள் என கூட்டத்தினரை பார்த்து கேட்டார் .கூட்டத்தினர் 5 லட்சம் என குரல் எழுப்பினர்.
செய்யாறு ,வெம்பாக்கம், வந்தவாசி, ஆரணி பகுதிகளில் பல நூறு கோடிகளில் நிதிகள் ஒதுக்கி நல திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் தாய்மார்கள் குழந்தைகள் என அனைவருக்கும் பல உன்னத திட்டங்களை தீட்டி நமது முதல்வர் செயல்படுத்தி வருகின்றார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ஒரு செங்கலை வைத்துவிட்டு போனார்கள் அந்த செங்கலை உங்களிடம் இதோ நான் காட்டுகிறேன், என்று செங்கலை காட்டினார்.
பொருளாதார உரிமைகளை மீட்டெடுக்க வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வெற்றி சின்னமான உதயசூரியனுக்கு வேட்பாளர் தரணி வேந்தனுக்கு பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இந்தப் பிரச்சார கூட்டத்தில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர்கள், நகர மன்ற தலைவர் மோகனவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், திமுக அனைத்து நிலை பொறுப்பாளர்கள், பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu