செய்யாறில் ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

செய்யாறில் ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
X

குடோனில் திடீா் சோதனை மேற்கொண்ட போலீசார்

செய்யாறில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள புகையி லை பொருட்களை பதுக்கி வைத்திருந்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.60 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் கேவர்சந்த் இவரது மகன் ரமேஷ்குமார் . இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வைத்தியர் தெருவில் மளிகை கடை வைத்து மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை குடோனில் மறைத்து வைத்து விற்கப்படுவதாக செய்யாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செய்யாறு டி.எஸ்.பி.வெங்கடேசன், காவல் உதவி ஆய்வாளா் சங்கா் மற்றும் போலீசார், மளிகைக் கடை மற்றும் கடைக்கு உள்பட்ட குடோனில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது குடோனில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 22 ஆயிரம் கிலோ எடையுள்ள 5 வகையான புகையிலை போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரமாகும். இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கேவர்சந்த், அவரது மகன் ரமேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தவாசி

வந்தவாசியில் கஞ்சா பொட்டலங்களுடன் தப்பி ஓடிய வாலிபர் போலீசார் மடக்கி பிடித்தனர் வந்தவாசி தெற்கு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராமு தலைமையிலான போலீசார் ஆரணி சாலை வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் நின் றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற னர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட மற் றொரு நபரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தபோது அவர் 19 வயதே ஆனவர் என்பதும், பாக் கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு