பள்ளி மாணவி தற்கொலை உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே வாழவச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகள் வர்ஷா (வயது 14). இவர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
வர்ஷா வீட்டில் வேலை செய்யாமல் செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த வர்ஷா நேற்று காலை வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டு தாயிடம் கூறினார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அங்கு சிகிச்சை பலனின்றி வர்ஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில வாலிபர் விபத்தில் பலி
ஜார்க்கண்ட் மாநிலம், கலகாபாத், கிரிதிக் பகுதியை சேர்ந்தவர் சுகன்மாஞ்சி. இவரது மகன் தீபக் (வயது 23).
இவர் திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே அழிஞ்சல்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்படும் தனியார் கம்பெனியில் கட்டிட வேலை பணி செய்து வந்தார்.
நேற்று மாலை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நர்சம்பேட்டை கிரஷர் ரோடு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் தீபக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த தீபக் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தனியார் கம்பெனி மேலாளர் பிரபாகரன் தூசி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu