லாரி டிரைவர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

லாரி டிரைவர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
X
லாரி டிரைவர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அதே ஊரில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு நேற்று உடல் நலம் சரியில்லாமல் வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அவரது தாயார் செய்யாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளித்தபோது அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவரை 3 வருடமாக காதலித்து வந்ததாகவும், அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி தனிமையில் சந்தித்ததாகவும் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சோனியா வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை தேடி வருகின்றார்.

லாரி டிரைவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த டி.வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 46). இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடைக்கு முட்டை வாங்க வந்தாள். அந்த சிறுமிக்கு குமார் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அருகில் உள்ள கொட்டகை பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து வந்து தாயிடம் கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், மகளை அழைத்துக் கொண்டு தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார். மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து. தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!