/* */

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற செய்திகள்: வருவாய் ஆய்வாளருக்கு சிறை தண்டனை

நீதிமன்ற செய்திகள்: விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை, அரசுப் பேருந்து ஜப்தி- நீதிமன்றம் உத்தரவு

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற செய்திகள்: வருவாய் ஆய்வாளருக்கு சிறை தண்டனை
X

செய்யாறு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பேருந்து

வண்டல் மண் எடுக்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.

வந்தவாசி தாலுகா தேசூர் அடுத்த சீயமங்கலத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தனது விவசாய நிலத்தின் தேவைக்காக அதே பகுதியில் உள்ள ஏரியில் இருந்து கட்டணமின்றி வண்டல் மண் எடுக்க வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு விண்ணப்பித்தார்.

அந்த சமயத்தில் பணியில் இருந்த தேசூர் வருவாய் ஆய்வாளர் கோபிநாத், வண்டல் மண் எடுக்க தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து சிவக்குமார் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வருவாய் ஆய்வாளர் கோபிநாத் லஞ்சம் வாங்கிய போது சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கை நீதிபதி ஈஸ்வரமூர்த்தி விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் கோபிநாத்திற்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

செய்யாற்றில் அரசுப் பேருந்து ஜப்தி

செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமத்தைச் சோந்த சுந்தரமூா்த்தி. கடந்த 25.10.2014 அன்று அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவா் இழப்பீடு கோரி செய்யாறு சாா்பு நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், சுந்தரமூா்த்திக்கு ரூ.16,828 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சுந்தரமூா்த்திக்கு இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிகிறது. இதனால், விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய செய்யாறு சாா்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, செய்யாறு பேருந்து நிலையத்திலிருந்து வேலூா் செல்லவிருந்த அரசுப் பேருந்தை (தடம் எண் 200) நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்து, செய்யாறு சாா்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

Updated On: 27 Feb 2023 7:03 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி முதல் கிளாசிக்கல் செஸ் வெற்றி பெற்ற...
 2. வீடியோ
  😧கிடு கிடுவென உயரும் விலை | வெள்ளிக்கு விலை இவ்வளவா? #gold #silver...
 3. ஈரோடு
  மேட்டூர் அணையின் நீர்வரத்து 389 கன அடியாக சரிவு
 4. போளூர்
  கோடை மழை பெய்ததால் நெல்லை விதைப்பு செய்ய தொடங்கிய விவசாயிகள்
 5. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 982 கன அடியாக அதிகரிப்பு
 6. இந்தியா
  பாஜக வெற்றி பெற்றால் கர்தவ்யா பாதையில் ஜூன் 9 பதவியேற்பு விழா
 7. திருவண்ணாமலை
  சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது
 8. திருவண்ணாமலை
  இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டுதல் பயிற்சி
 9. தொழில்நுட்பம்
  கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை 'ருத்ரம்-II: இந்தியா வெற்றிகரமாக சோதித்த...
 10. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்