திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம்
X

செய்யாறில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் சி.ஏழுமலை தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட துணைத்தலைவர் அருள், நகர தலைவர் லட்சுமணன், நகர துணைத்தலைவர் ஏ.சி.கே.பிரபாகரன், பொதுச் செயலாளர் குப்புசாமி, முன்னாள் மாவட்ட பொதுசெயலாளர் ஜெ.கே.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் மீனாட்சி நித்தியாசுந்தரம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் செய்யாறு ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும், செய்யாறு, வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களிலும் மூட்டைக்கு கூடுதலாக 40 ரூபாய் வசூலிப்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த செய்யாறு, ஆரணி, வந்தவாசி, போளூர், வெம்பாக்கம் உள்ளிட்ட நகர கழக, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai future project