90 கிலாே குட்கா பொருட்கள் பதுக்கி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமாருக்கு வந்த ரகசிய தகவலின்பேரில், செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் மேற்பார்வையில், தூசி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் அப்துல்லாபுரம் காவல்துறை சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே காஞ்சிபுரத்திலிருந்து செய்யாறு நோக்கி சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த TN25 BM 4975 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் தடைசெய்யப்பட்ட சுமார் 7 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். குட்காவை கடத்தி வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த மனோஜ் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், மனோஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தனிப்படையினர் காஞ்சிபுரம் விரைந்தனர். விளக்கடி கோயில் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 93 கிலோ குட்கா பொருட்களை கண்டுபிடித்த காவலர்கள், செல்வராஜை கைது செய்தனர்.
மொத்தமாக சுமார் 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ குட்காவை மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவலர்கள், தூசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu