திருவத்திபுரம் நகா்மன்ற கூட்டம், கவுன்சிலா்கள் தர்ணா போராட்டம்..!
நகரமன்ற கூட்டத்தின் நடுவில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலா்
செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் நகரமன்ற கூட்டம் நடந்தது. நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பேபி ராணி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) குமரன், துப்புரவு ஆய்வாளர் மதனராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கவுன்சிலா்கள் தங்களது வாா்டுகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளை கோரிக்கைகளாக முன் வைத்து பேசினா்.
அப்போது 12-வது வார்டை சேர்ந்த பா.ம.க. கவுன்சிலர் சீனிவாசன் கடந்த 1½ ஆண்டுகளாக தாங்கள் தெரிவித்த எந்தவிதமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் எனது வார்டு புறக்கணிக்கப்படுவதாக கூறி கருப்பு துணியால் கண்ணைக் கட்டிக் கொண்டு நகரமன்ற கூட்டத்தின் நடுவில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருடன் 20-வது வார்டை சேர்ந்த பா.ம.க. கவுன்சிலர் பத்மபிரியாவும் போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது மண்டியிட்டு நகர்ந்தவாரே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் எனக் கூறிக் கொண்டு வெளியேறினார்.
இதேபோல, 14 -ஆவது வாா்டு திமுக கவுன்சிலா் அகமத் தங்கள் வாா்டில் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் எனவும், பணிகளை முடிக்கும் வரை மன்றக் கூடத்தை விட்டு வெளியேற மாட்டேன் என தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதற்கு நகரமன்ற தலைவர் மோகனவேல், ஒரு வாரத்தில் பணிகள் முடிக்கப்படும் என்றார். ஆனால் பணிகள் முடித்தால் மட்டுமே தர்ணா போராட்டத்தை கைவிடுவேன் என அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மற்ற கவுன்சிலர்கள் அகமத்தை சமாதானம் செய்ய முயன்றனர். அதனை ஏற்க மறுத்த அவர், என்னுடைய கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தண்ணீர் டேங்க் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என ஆவேசமாக கூறிக்கொண்டு, நகரமன்ற கூட்டத்தை விட்டு வெளியேறினார். அப்போது கையில் இருந்த நகரமன்ற அஜெண்டாவை தூக்கி வீசிவிட்டுச் சென்றார்.
பின்னா், கவுன்சிலா்களுக்கு பதிலளித்து நகா் மன்றத் தலைவா் மோகனவேல் பேசுகையில், ஒரு வாரம் காலக்கெடு தருமாறு கேட்டுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்த பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu