திருவண்ணாமலை: செய்யாறில் அதிகபட்சமாக 43 மில்லி மீட்டர் மழை

திருவண்ணாமலை: செய்யாறில் அதிகபட்சமாக 43 மில்லி மீட்டர் மழை
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக செய்யாறில் 43 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் இன்றும் பரவலாக மழை பெய்தது. திருவண்ணாமலையில் இன்றும் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது விட்டு விட்டு மழை பெய்தது. அதுமட்டுமின்றி குளிர்ந்த காற்றும் வீசியது.

வந்தவாசியில் காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை 2 மணிநேரம் மழை பெய்தது. வந்தவாசி மற்றும் கொடுங்காலூர், மருதாடு, சென்னாவரம், சேதராகுப்பம், பாதிரி, சளுக்கை, தெள்ளார், மழையூர், வெளியம்பாக்கம், அம்மையப்பட்டு, வெண்குன்றம், மங்கநல்லூர், பிருதூர், வங்காரம் ஆகிய கிராமங்களில் பலத்த மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக செய்யாறில் 43 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆரணி- 33, வெம்பாக்கம்- 23, சேத்துப்பட்டு- 16.6, கலசபாக்கம்- 16, கீழ்பென்னாத்தூர்- 12.8, போளூர்- 8.6, வந்தவாசி- 8, தண்டராம்பட்டு- 6, திருவண்ணாமலை- 5.2, ஜமுனாமரத்தூர்- 5, செங்கம்- 4.2.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!