மது விற்றவர்கள் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சிலர் வேனில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வந்தனர். பஸ் நிலையம் பின்புறம் பங்களா தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் இறங்கினர். அப்போது வேனை சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர் ஓய்வு எடுத்து கொண்டி ருந்தார்.
திடீரென செல்ப் மோட்டார் எரிந்து கியரில் இருந்து வேன் தானாக ஓடியது. உடனே சுதாரித்து கொண்ட டிரைவர் வேனில் இருந்து கீழே இறங்க முயன்றார். அதற்குள் அருகே இருந்த சாலையோர தடுப்பு மீது வேன் மோதி நின்றது. பின்னர், வேன் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதற்கிடையில், வேன் தானாக ஓடியதால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர், மண்ணை வாரிதூவி என்ஜினில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மேலும், செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சம்பவ இடத்திற்கு வருவ தற்குள் அங்கிருந்த மக்கள் நீரை ஊற்றி வேன் என்ஜினில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். தொடர்ந்து, வேனில் பழுது ஏற்பட்ட செல்ப் மோட்டார் மாற்றப்பட்டு தயார் நிலைக்கு வந்தது. மேலும், வேனில் யாரும் இல்லாதபோது இந்த விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மது விற்ற 4 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தூசி அருகே மகாஜனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனி (வயது 55,) சித்தாலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த உளியான் என்ற கோவிந்தன் , ஹரிஹரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் மது விற்றபோது அவர்களை பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu