திருவண்ணாமலை: முதல்வர் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை: முதல்வர் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் ஆய்வு
X

தமிழக முதல்வர் திருவண்ணாமலை வருகையையொட்டி விழா நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

அடுத்த மாதம் தமிழக முதல்வர் திருவண்ணாமலை வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளார். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டுதல், திருவண்ணாமலை புதிய நவீன மத்திய பஸ் நிலையம் அடிக்கல் நாட்டுதல் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள மேம்பாலம் திறப்பு விழா, கிரிவலப்பாதையில் வேங்கிகால் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா நுழைவாயில் திறந்து வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அதை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மேடை அமைப்பது, கார் பார்க்கிங் அமைக்கப்பட உள்ள திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள நகராட்சி மைதானத்தையும், பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். பின்பு எண்ணும் எழுத்தும் என்னும் புதிய கல்வி திட்டத்தை தமிழக முதல்வர் வருகின்ற 13 ஆம் தேதி செய்யாறு தொகுதியில் தொடங்கி வைக்க உள்ளார். திட்ட தொடக்க விழா நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் முருகேஷ்,நேற்று மாலை செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மங்களபுரம் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர் நிலைப்பள்ளி ,மாமண்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய மூன்று இடங்களை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பாதுகாப்புகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகுதான் இடம் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் பிரதாப் ,முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி ,கல்வி மாவட்ட அலுவலர், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர், கோட்டப் பொறியாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்