திருவண்ணாமலை: செய்யாறு அரசு மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு

திருவண்ணாமலை: செய்யாறு அரசு மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு
X

செய்யாறு அரசு மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு.

செய்யாறு அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்றிதழ் வழங்குவதற்காக மத்திய மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்றிதழ் வழங்குவதற்காக மத்திய மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தேசிய தர நிலை உறுதிச் சான்று மதிப்பீட்டு குழு அலுவலர்களுக்கான மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சேர்ந்த காசநோய் இணை இயக்குனர் பருன் சன்ரா, கவுகாத்தி ராணுவ செவிலியர் பயிற்சி நிலைய மருத்துவர் ஜெயலட்சுமி, ராஜஸ்தான் மாநில மருத்துவர் விகாஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

மருத்துவமனையில் உள்ள 18 துறைகளின் செயல்பாடுகள், பதிவேடுகள், நோயாளிகளை கவனிப்பது, உள்கட்டமைப்பு வசதி, மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு, செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த தேசிய குழு ஆய்வின் முடிவில் அரசு மருத்துவமனைக்கு தரச் சான்றிதழ் வழங்குவதற்குத் தேவையான அறிக்கையை மத்திய சுகாதாரத் துறையினர் மத்திய அரசுக்கு அளிப்பார்கள் என்றும் அதன் பேரில் சுகாதாரத்துறை பரிசீலித்து செய்யாறு மருத்துவமனைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், இதர உதவிகளை செய்து தர வாய்ப்புள்ளது என்றும் செய்தியாளர்களிடம் அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி