பூட்டிய வீடுகளை உடைத்து பணம் நகைகளை கொள்ளையடித்த திருடன் பிடிபட்டான்
மோரணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்கட்டூர் கிராமத்தில் இரண்டு வீட்டை உடைத்து திருடிய நபர் கைது அவரிடமிருந்து 15.1/2 சவரன் தங்க நகைகள் மற்றும் 5.7 கிராம் வைர நகைகள் பறிமுதல்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுக்கா, பெருங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் கோபிநாதன், வயது 29 என்பவரது வீட்டில், கடந்த13.08.2021-ம் தேதி இரவு, சமையலறை சிமெண்ட் ஷீட் மேற்கூரையை உடைத்து, படுக்கையறையில் இருந்த பீரோவை உடைத்து 9 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசுகள் திருடு போய்விட்டதாக கொடுத்த புகாரை அடுத்து மோரணம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், செய்யாறு காவல் ஆய்வாளர் தலைமையில், மோரணம் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, திருவண்ணாமலை கைவிரல் ரேகை பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கையின் பெயரில் பெருமாள் த/பெ.ரவி. பெருங்கட்டூர் கிராமம், வெம்பாக்கம் தாலுக்கா, திருவண்ணாமலை மாவட்டம் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், கோபிநாதன் என்பவரது வீட்டை உடைத்து திருடியது அவர்தான் என தெரியவந்தது.
மேலும் விசாரணை செய்ததில் கடந்த 20.10.2020 தேதி இரவு அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகன் ஜெயவேல் என்பவரது வீட்டை உடைத்து 7.1/2 சவரன் தங்க நகை மற்றும் 5.7 கிராம் வைர நகைகளை திருடியதும் அவர்தான் என தெரியவந்தது. அவரிடமிருந்து மொத்தமாக 15.1/2 சவரன் தங்க நகைகள் மற்றும் 5.7 கிராம் வைர நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu