செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை-பணம்  திருட்டு
X

பைல் படம்

செய்யாறு அருகே வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் ரூ.3 லட்சம் பணம், நகைகளை திருடிவிட்டு தப்பி உள்ளனர்.

செய்யாறு அருகே வீட்டின் கதவை உடைத்த மர்மநபர்கள் ரூ.3 லட்சம் பணம், நகை, திருடிவிட்டு தப்பி உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பைங்கினர் கிராமம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் . சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரியா என்கிற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

இவர்கள் கடந்த 2 தினங்களாக தங்களது வீட்டினை பூட்டி விட்டு கம்பன் நகர் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.

அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சரவணன் வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சரவணன் மற்றும் அவரது மனைவி பிரியா வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டும் பின்கதவு திறந்த நிலையிலும் இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் துணிகள் மற்றும் நகை வைத்திருந்த பெட்டியும் சிதறி கிடந்ததை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தனர். பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சரவணன் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். செய்யாறு பகுதியில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.

விபத்தில் அதிகாரி உயிரிழப்பு

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அதிகாரியாக ராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 15-ந்தேதி திருவண்ணாமலை ஐ.டி.ஐ. முன்பு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!