செய்யாறு அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குழந்தை திருமணம் தொடர்பாக வரப்பெறும் புகாரின் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலர்கள், போலீசார் குழந்தை திருமணங்களை தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெம்பாக்கம் வட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தனியார் பயிற்சி மையத்தில் செவிலியர் படிப்பு படித்து வருகிறார். 17 வயதுடைய சிறுமிக்கு திருமணம் நடைபெறுவது குறித்து 1098 எண்ணிற்கு சிலர் தகவல் அளித்துள்ளனர்.
அதன்பேரில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தை நல அலுவலர் உத்தரவின் பேரில் வெம்பாக்கம் வட்டார ஊர்நல அலுவலர் லலிதா தென்கழனி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்று நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
மேலும் 17 வயதுடைய சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்றும், 18 வயது பூர்த்தியானதும் திருமணம் செய்து வையுங்கள் என்று சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரைக்கூறி எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் திருமணம் செய்து வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறினர்
தொடர்ந்து சிறுமியை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து ஊர் நல அலுவலர் லலிதா, மணமகன் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் மீது மோரணம் போலீசில் புகார் செய்தார்
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu