வெம்பாக்கம் அருகே பைக் விபத்தில் ஆசிரியர் உயிரிழப்பு

வெம்பாக்கம் அருகே பைக் விபத்தில் ஆசிரியர் உயிரிழப்பு

பைல் படம்.

வெம்பாக்கம் அருகே பைக்கிலிருந்து தவறிவிழுந்த விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த குத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன் (வயது 55). இவர் அழிவிடை தாங்கி அரசினர் மேல்நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பணி முடிந்து மாலை வீட்டுக்கு ஜம்போடை வெம்பாக்கம் சாலை எடப்பாளையம் அருகே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நாகப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகப்பன் தம்பி காண்டீபன் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story