செய்யாறில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்

செய்யாறு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செய்யாறில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்
X

செய்யாறில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. தற்போது சொர்ணவாரி பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்களை மார்க்கெட் கமிட்டியில் கொண்டு வந்து உள்ளனர்.

இன்று காலையில் நெல்களை எடை போடும் தொழிலாளர்கள் எடை போட முயன்ற போது கமிட்டியின் கண்காணிப்பாளர் சரவணன் நெல், மணிலா, எள் உள்ளிட்ட தானியங்களை எடை போட வேண்டாம் என்றும் நிறுத்தி உள்ளார்.

2, 3 நாட்களாக நெல்லை கொண்டு வந்திருந்து காத்திருந்த விவசாயிகள் பாதிப்படையவே எடை போடாததை கண்டித்து செய்யாறு ஆற்காடு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டி.எஸ்.பி. செந்தில், இன்ஸ்பெக்டர் பாலு, சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ராம்குமார், கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் ஆகியோர் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி நெல்களை எடை போட நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

விவசாயிகள் டி.எஸ்.பி. செந்தில் அளித்த உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு மார்க்கெட் கமிட்டிக்கு சென்று விட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 4 Aug 2022 12:47 PM GMT

Related News