திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை உணவு திட்டம் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை உணவு திட்டம் ஆய்வு
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் காலை உணவு திட்டம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தை திடீர் ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் காலை உணவு திட்டம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

செய்யாறு

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் வெம்பாக்கம், ஜம்போடை ஆகிய கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செயல்படுத்தப்படும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்தி ஆய்வு மேற்கொண்டனர்.

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வேடந்தவாடி ஊராட்சியில் , ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை ஆய்வு செய்தார்.

அப்போது மாணவர்களிடத்தில் காலை உணவு சுவையாகவும் தரமாகவும் உள்ளதா என கேட்டு அறிந்தார். மேலும் சரியான நேரத்தில் சமைத்துக் கொடுக்கிறார்களா என கேட்டறிந்து காலை உணவினை சுவைத்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் ஒன்றிய குழு தலைவர் கூறுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மாணவர்கள் காலையில் பள்ளிக்கு வரும் பொழுது உணவு அருந்தாமல் வருகிறார்கள். அவர்களின் பசியை போக்க வேண்டும் என்பதற்காக காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து அதன் மூலம் மாணவர்களின் பசியை போக்கி மாணவர்கள் சிறந்த முறையில் படிப்பதற்கு உண்டான வழியை அமைத்துக் கொடுத்தார்.

இத்திட்டத்தின் மூலம் தமிழக முழுவதும் காலை உணவு திட்டம் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் காலை உணவு திட்டம் சரியாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்ததில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு சுவையாகவும் தரமாகவும் உள்ளது. இந்த காலை உணவு திட்டத்தில் சுமார் 97 சதவீத மாணவர்கள் காலை உணவு அருந்தி வருகிறார்கள். இந்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 4200 மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். இந்த சிறப்பான திட்டத்தின் மூலம் காலை உணவு அருந்திவிட்டு மாணவர்கள் பாடம் கற்று வருகிறார்கள் என ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!