Students Participated Competition கலைஞா் நூற்றாண்டு விழா: ஒப்புவித்தல் போட்டியில் மாணவா்கள் பங்கேற்பு

மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் மற்றும் எம்எல்ஏ ஜோதி
Students Participated Competition
செய்யாற்றில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சாா்பில் கலைஞா் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு தனியார் திருமண மண்டபத்தில் திமுக கலை இலக்கிய பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கலைஞரின் கவிதைகள், திரைப்பட வசனங்கள் போட்டி நடைபெற்றது.
போட்டியினை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன்துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் பேசுகையில்தற்போது திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை, அரசு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ஆயிரம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா புத்தகம் விலையில்லா சைக்கிள் என மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்தார்.செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் உள்ளிட்டோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.
மாவட்ட அமைப்பாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் மோகனவேல், வெங்கடேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிரொலி மணியன், கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், நகர செயலாளர் விசுவநாதன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
செய்யாறு, வந்தவாசி, ஆரணி , போளூர் தொகுதிக்குட்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று பேசினர். போட்டி நடுவர்கள் நியமித்து போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர் . முடிவில் சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu