பள்ளிகளுக்கு முதல் நாளில் வருகை தந்த மாணவிகளுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

பள்ளிகளுக்கு முதல் நாளில் வருகை தந்த மாணவிகளுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
X

அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளை  மேல தாளத்துடன் வரவேற்றனர்

செய்யாறு அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளை சிவப்பு கம்பளம் விரித்து மேல தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு 2023 - 24ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் திங்கட்கிழமை தொடங்கின. பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விதமாக பள்ளி நுழைவு வாயிலில் மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்தும், பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கியும் தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி வரவேற்றார். அவருடன், பெற்றோா் ஆசிரியா் கழகம், பள்ளி வளா்ச்சிக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு, முன்னாள் மாணவிகள் சங்கம் ஆகியவற்றின் பொறுப்பாளா்கள் மற்றும் ஆசிரியைகள் ஆகியோரும் மாணவிகளை வரவேற்றனா்.

மேலும், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் சின்னதுரை, திருவத்திபுரம் நகா்மன்ற உறுப்பினா்கள் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி தேவி, முன்னாள் மாணவிகள் சங்கத் தலைவி மற்றும் பள்ளியைச் சோந்து பல்வேறு குழு உறுப்பினா்கள் மாணவிகளை வாழ்த்திப் பேசினா். உதவித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறி பேசினாா்.

மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கடப்பநந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் பாண்டுரங்கன், இந்திராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியை சண்முகப்பிரியா வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் கலந்து கொண்டு 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2023-2024ஆம் ஆண்டுக்கான நோட்டு, புத்தகங்களை வழங்கினாா். மேலும், 6, 8-ஆம் வகுப்பில் சேர்ந்த புதிய 2 மாணவா்களை பள்ளியில் சோக்கை செய்து சால்வை அணிவித்து வரவேற்று பாடப் புத்தகங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

சமையலறை கூடம் திறப்பு

சேத்துப்பட்டு வட்டம் தேவிகாபுரம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய சமையலறை கூடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது

இந்தப் பள்ளியில் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவு திட்டத்தின் கீழ் 2021-2022ஆம் நிதியாண்டில் ரூ.6 லட்சத்து 63 ஆயிரத்தில் இருப்பறையுடன் கூடிய புதிய சமையலறைக்கூடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டட திறப்பு விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கிடேசன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா். மேலும், அனைத்து அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ.7 லட்சத்து 52ஆயிரத்து 700 செலவில் மாணவ, மாணவிகளுக்காக அமைக்கப்பட்ட இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் கட்டடத்தையும் ஊராட்சி மன்றத் தலைவா் திறந்துவைத்தாா். தலைமை ஆசிரியை (பொறுப்பு) காயத்திரி, பள்ளிமேலாண்மைக் குழுத் தலைவா் பரிமளா ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் , ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், திமுக அவைத் தலைவா் ரவி உள்பட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறைக்குப்பின் வகுப்புகள் தொடங்கியது. முதல் நாளில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியை பத்மஜா பள்ளி மாணவிகள் முன்னிலையில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பத்மஜா மயங்கிக் கீழே விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த ஆசிரியைகள் உதவியுடன் மீட்கப்பட்டு கார் மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

Tags

Next Story
உங்கள் திறமைககுக்கு உதவியாக அமையும் AI!