/* */

மாணவிக்கு பாலியல் தொல்லை, மாணவன் போக்சோவில் கைது!

செய்யாறு அருகே 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐடிஐ மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மாணவிக்கு பாலியல் தொல்லை, மாணவன் போக்சோவில் கைது!
X

செய்யாறு அருகே 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐடிஐ மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி. தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ஐடிஐ படிக்கும் 17 வயது மாணவர். இவர், மாணவி பள்ளிக்கு செல்லும்போது பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.

மேலும், கையை பிடித்து இழுத்தும், சைகை காட்டியும் தொந்தரவு செய்து வந்தாராம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் அந்த மாணவனை எச்சரித்துள்ளனர். ஆனாலும், அந்த மாணவன் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஐடிஐ மாணவனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

வீடு புகுந்து திருடிய நான்கு பேர் கைது

செங்கம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனா்.

செங்கத்தை அடுத்த பேயாலம்பட்டு பகுதியைச் சேர்ந்தவா் கோவிந்தன் மகன் மணிகண்டன். இவா் கோயில்களில் குறி சொல்லுதல் மற்றும் உணவகங்களில் கூலி வேலையும் செய்து வந்துள்ளாா்.

இவருக்கு, தஞ்சாவூரைச் சேர்ந்த செங்குட்டவன் மகன் மணிகண்டன் என்ற திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தாலிகட்டிக்கொண்டு பேயாலம்பட்டு பகுதியில் வசித்து வந்துள்ளனா்.

மேலும், ஜவ்வாதுமலை கிளையூா் கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை திருப்பதியும், நாகபட்டினத்தைச் சேர்ந்த திருநங்கை தினேஷும் திருமணம் செய்துகொண்டு, பேயாலம்பட்டு மணிகண்டன் குடும்பத்துடன் இணைந்து நான்கு பேரும் ஒரே வீட்டில் சில தினங்களாக தங்கியிருந்துள்ளனா்.

இந்த நிலையில், இவா்கள் காலை 11 மணியளவில் அதே பகுதியில் விவசாய நிலத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வரும் சந்தோஷம் என்பவரது வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த வெள்ளிக் கொலுசு மற்றும் ரொக்கம் ரூ.2 ஆயிரத்தை திருடியுள்ளனா்.

இதைப் பாா்த்த அப்பகுதி விவசாயி ஒருவா் ஊா்மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளாா். இளைஞா்கள் சிலா் அங்கு விரைந்து சென்று அவா்களை விரட்டிப் பிடித்து தாக்கி செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து நான்கு பேரையும் ஒப்படைத்தனா்.

காவல் ஆய்வாளா் செல்வராஜ் வழக்குப் பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Updated On: 6 April 2024 11:43 AM GMT

Related News