பள்ளியின் முன் தேங்கிய மழைநீர்: மாணவர்கள் பாதிப்பு

பள்ளியின் முன் தேங்கிய மழைநீர்:  மாணவர்கள் பாதிப்பு
X

மழை நீரில் நடந்து வகுப்பறைகளுக்கு செல்லும் மாணவர்கள்

செய்யாறு அருகே பலத்த மழை காரணமாக பள்ளியின் முன் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினா்.

செய்யாறு அருகே பலத்த மழை காரணமாக பள்ளியின் முன் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினா்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் புதன்கிழமை இரவு முதல் நேற்று வியாழக்கிழமை வரை மழை பெய்தது. செய்யாறு வட்டத்தில் பெய்த மழையின் அளவு 83 மில்லி மீட்டராகும் .

மழையின் காரணமாக செய்யாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் குடியிருப்பு மற்றும் அரசுப் பள்ளிகளில் மழைநீா் வடிய வசதியில்லாததால் அதிகளவில் தண்ணீா் தேங்கி நின்றது.

செய்யாறு வட்டத்தில் உள்ள மோரணம் கிராமத்தில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கி வடியாமல் நின்றது. இதன் காரணமாக மாணவர்கள் நேற்று தங்களது வகுப்பறைகளுக்கு செல்ல மழை நீரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 83 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மூன்று ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

பள்ளியின் முன் அதிக அளவில் மழை நீர் தேங்கி இருப்பதை அறிந்த கிராம மக்கள் ஆசிரியர்கள் தண்ணீரில் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு தண்ணீரை வெளியேற்றினர். பள்ளியின் முன்புறம் தாழ்வாக உள்ளதால் மழை நீர் தேங்குகிறது.

மழைநீர் வெளியேறுவதற்கு சாலையின் இருபுறமும் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதேபோல செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் கீழ் புதுப்பாக்கம் விரிவுபகுதி பசும்பொன் நகரில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்கி இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

மேலும் நோய் தொற்றும் அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture