/* */

ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.55 ஆயிரம்

ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.55 ஆயிரம்
X

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயிலில் உண்டியல்கள் காணிக்கை புதன்கிழமை எண்ணப்பட்டதில், ரூ.55,000 பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில், இரு நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.55,005-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணி அறங்காவலா் குழுத் தலைவா் பாா்த்தீபன், செய்யாறு ஆய்வா் முத்துசாமி, செயல் அலுவலா் ஹரிஹரன், கணக்காளா் ஜெகதீஷ் , இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், ஊா் மக்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் நடைபெற்றது.

ஸ்ரீரேணுகாம்பாள் ( எ) எல்லையம்மன் கோயிலில் உண்டியல்கள் காணிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் ( எ) எல்லையம்மன் கோயிலில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. ரூ.1,35,593-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உண்டியல் காணிக்கை கடந்த 24.01.24 அன்று எண்ணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்தி இருந்த காணிக்கை எண்ணப்பட்டது.

இதில், நிரந்தரமாக உள்ள நான்கு உண்டியல்கள் மூலம் ரூ.1,35,593-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணி அறநிலையத் துறை ஆய்வா்கள் முத்துசாமி (கலசப்பாக்கம்) நடராஜன் (செய்யாறு), செயல் அலுவலா் ஹரிஹரன், கணக்காளா் ஜெகதீசன், ஊராட்சி மன்றத் தலைவா் குப்புசாமி, இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், ஊா் மக்கள் உள்ளிட்டோா் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் நடைபெற்றது.

Updated On: 25 May 2024 1:49 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  4. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  5. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  10. குமாரபாளையம்
    பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு