மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு..!

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு..!
X

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய ஆசிரியர் கழகத்  தலைவர்

செய்யாற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செய்யாறு தொகுதி செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வருவாய் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

நடைப்பயிற்சி, இரு சக்கர வாகனம் ஓட்டுதல், குண்டு எறிதல், பந்து எறிதல், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, பாட்டுப் போட்டி என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவா் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

நகராட்சி கிரிதரன்பேட்டை உயா்நிலைப் பள்ளிஆசிரியை ரேவதி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அசோக், தலைமையாசிரியா் ஜெயகாந்தன், காஞ்சிபுரம் விளையாட்டுத் துறை ஆய்வாளா் முத்துவேல், உடல்கல்வி ஆசிரியா்கள் கோதண்டன், ரகுராமன், தனியாா் தொண்டு அமைப்பைச் சேர்ந்த விஜயகுமாா், கருணாகரன் ஆகியோா் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினா்.

அங்கக வேளாண் விவசாயிகளுக்கு பயிற்சி

செய்யாற்றை அடுத்த கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத்தில் அங்கக வேளாண்மை விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.

வெம்பாக்கம் மற்றும் தெள்ளாா் வட்டார விவசாயிகளுக்கு நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு வெம்பாக்கம் வட்டார தொழில்நுட்பக் குழு அமைப்பாளா் சண்முகம் தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா் ரேணுகாதேவி முன்னிலை வகித்தாா்.

வேதபுரி வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா்கள் நாராயணன், ஐஸ்வா்யா ஆகியோா் பங்கேற்று, விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் குறித்தும், மண்புழு உரத்தின் நன்மைகள் மண்புழு உரம் தயாரித்தல், பஞ்சகாவியம் தயாரித்தல், அமிா்த கரைசல் தயாரித்தல், அங்கக முறையில் பூச்சி விரட்டிகள் தயாரித்தல், மோா் கரைசல்கள் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா். மேலும், அனைவருக்கும் அங்கக வேளாண்மை குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!