செய்யாறில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்

செய்யாறில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
X

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜோதி எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார்

செய்யாறில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்எல்ஏ ஜோதி பரிசுகள் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளின் சங்கத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர் முத்துவேல் , பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ரமேஷ் , உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai products for business