ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்து சிறப்பு பயிற்சி

ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்து சிறப்பு பயிற்சி
X

விவசாயிகளுக்கு நடைபெற்ற ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்து சிறப்பு பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

செய்யாறு வட்டாரம் காழியூர் கிராமத்தில் வேளாண்மைதொழில்நுட்ப முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாரம் காழியூர் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப முகமை திட்டத்தின் (அட்மா) சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுமத்ரா தலைமை தாங்கினார். மூத்த வேளாண்மை அலுவலர் வைத்தீஸ்வரன், உதவி வேளாண்மை அலுவலர் அண்ணாமலை ஆகியோர் மண் மாதிரி எடுத்தல், மண் பரிசோதனை, நெல் பயிரில் உர மேலாண்மை, பூச்சி நோய் கட்டுப்படுத்துதல் முறைகள், மானிய திட்டங்கள், இடுபொருட்கள் குறித்து பேசினார்கள். பின்னர் தோட்டக்கலை அலுவலர் தொல்காப்பியன் தோட்டக்கலை பயிர்கள் மேலாண்மை மற்றும் பூச்சி நோய் மேலாண்மை குறித்து பேசினார்.

அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஜெயராஜ், தினகரன் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் . 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.

காரீப் பருவத்தில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி

செய்யாற்றை அடுத்த கீழ்நெல்லி கிராமத்தில் காரீஃப் பருவத்தில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

வட்டார தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வேளாண் அலுவலா் ரேணுகாதேவி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

அப்போது, வேளாண் அலுவலா் ரேணுகாதேவி, முதல்வரின் மண்ணுயிா் காத்து, மன்னுயிா் காப்போம் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், பயறு வகைகள், மண் வளத்தைக் காக்க பசுந்தாள் உர விதைகள் பயன்படுத்துதல் திட்டம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், திரவ உயிரி உரம் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்து பயிற்சி அளித்தாா்.

உதவி அலுவலா் தங்கராசு, பூச்சி நோய்த் தாக்குதல் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் குறித்தும், வட்டார தொழில்நுட்ப மேலாளா் கங்காதரன் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அதன் தொழில்நுட்பங்கள் குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளா் பத்மஸ்ரீ அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு தெரிவித்தனா்.

பயிற்சியில் கீழ்நெல்லி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

Next Story