நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
X

தூய்மை பணியாளர்களுக்கு நடைபெற்ற  சிறப்பு மருத்துவ முகாம்.

திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நகர தூய்மையான மக்கள் இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவத்திபுரம் நகராட்சியில் பணிபுரியும் 110 தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

இந்த மருத்துவ முகாமுக்கு நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குல்சார், நகராட்சி ஆணையாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்புரவு அலுவலர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். நாவல் பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் சர்மிளா தலைமையில் பொது மருத்துவர்கள் யோகேஸ்வரன், முருகேஷ், பரணி, சுருதி உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

110 பேருக்கு ரத்தப் பரிசோதனை, ரத்த அளவு மற்றும் பொது மருத்துவத்திற்கான பரிசோதனைகளை செய்து சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் ராமலிங்கம், , துப்புரவு ஆய்வாளர் மதனராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!