/* */

பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில், சிறப்பு மருத்துவ முகாம்

செய்யாற்றை அடுத்த பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 183 போ் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

HIGHLIGHTS

பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில், சிறப்பு மருத்துவ முகாம்
X

பள்ளி மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய மருத்துவர்கள், ஆசிரியர்கள்  

செய்யாற்றை அடுத்த பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 183 போ் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், மருத்துவா் கிரிஜா தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று பணியாளா்கள் 183 பேருக்கு உயரம், எடை, உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறு உபாதைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கினா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவா் புஷ்பா ராஜா, துணைத் தலைவா் கருப்பு, ஊராட்சி மன்றச் செயலா் சிவானாந்தம், சுகாதார ஆய்வாளா் சம்பத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பள்ளி மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள்

செய்யாற்றை அடுத்த இராந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 461 மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் வினோத்குமாா் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் துரை, நலக் கல்வி அலுவலா் எல்லப்பன், மருத்துவா் யோகேஸ்வரன், சுகாதார ஆய்வாளா் கே. சம்பத் ஆகியோா் முன்னிலையில் பள்ளியில் பயிலும் 461 மாணவ, மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பகுதி சுகாதார செவிலியா் கலைவாணி, செவிலியா் கோமதி, சுகாதார ஆய்வாளா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 15 Feb 2023 1:49 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...