செய்யாறு வட்டத்தில் யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்

செய்யாறு வட்டத்தில் யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்
X

தூசி கிராமத்தில் நடைபெற்ற யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்.

செய்யாறு அடுத்த தூசி கிராமத்தில் யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சுகாதார மாவட்டம் சார்ந்த நெடும்பிறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட்ட தூசி கிராமத்தில் இன்று யானைக்கால் நோய் பரப்பும் உச்சரெரியா பான்கிராப்ட்டி முதிர் புழுவின் ஆண்டிஜன் நேரடியாக கண்டறியும் பரிசோதனை நடைபெற்றன.

செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநர் பிரியாராஜ் ஆனையின்படி, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் துரைராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள் கோகிலா, சக்திவேல் முன்னிலையில் நடைபெற்றன. ஆய்வக நுட்புணர்கள் வினாயகம், மோகன் ஆகியோர் இரத்தமாதிரி சேகரித்தனர்.

சுகாதார ஆய்வாளர்கள் எ.ஆனந்தன், சரவணன், ராம்குமார், ஏழுமலை, பகுதி சுகாதார செவிலியர் மாலா, கிராம சுகாதார செவிலியர்கள் மரியஜோதி, மகாலட்சுமி, உமா மகேஸ்வரி, மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story