மேல்மா விவசாயிகளின் போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் மேதா பட்கர் ஆதரவு

நிகழ்ச்சியில் பேசிய சமூக ஆர்வலர் மேதா பட்கர்
மேல்மா கூட்டுச்சாலையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சமூக ஆர்வலர் மேதா பட்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து 247-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேல்மா கூட்டுச்சாலையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சமூக ஆர்வலர் மேதா பட்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது,
விவசாயிகளின் கருத்தை கேட்டு ஆலோசிக்காமல், 3-வது கட்ட சிப்காட் விரிவாக்கத் திட்டத்துக்கு நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்த முயற்சி செய்கிறது. இதனை கண்டித்து போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து அடக்குவது என்பது அரசின் பயத்தை காண்பிக்கிறது.
பசுமை நிறைந்த நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் கொண்டு வருவது அவசியமா?. நிலம் என்பது விவசாயிகளின் உயிர், ரத்தம், வியர்வையால் உருவானது.
அதனால்தான் நாம், நிழலில் உணவை சுவைக்கின் றோம்.
கடந்த 2013-ல் கொண்டு வரப்பட்ட நில ஆர்ஜித திருத்த சட்டப்படி நிலங்களை அரசு ஆர்ஜிதம் செய்யவில்லை. பிரிட்டிஷ் காலத்தில் வகுக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் படி, விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறிக்கிறது.
மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிடக் கோரும் விவசாயிகளின் குரல்களையும் காது கொடுத்து கேட்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் அமைச்சர், எம்எல்ஏ மற்றும் விருந்தினர்களுக்கு சாப்பிட என்ன கொடுப்பார்.
சிப்காட் பகுதிகளில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை என கூறும் அரசு, பெண்களுக்கு 200 ரூபாயும் ஆண்களுக்கு 400 ரூபாயும் வழங்குகிறது. இதன் மூலம் அவர்களை ஏழ்மை நிலையில் வைத்துள்ளது. பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இந்திய அளவில் விவ சாயிகள் உயிரிழந்தும், விவசாய சட்டங்களை அரசு விலக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு சிப்காட் திட்டங்களை அம்பானி, அதானியின் நிறுவனங்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது.
நர்மதா அணை, நந்தி கிராம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச் சினை என அனைத்து போராட் டங்களும் மக்களின் உறுதியான நம்பிக்கையால் வெற்றி பெற் றுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் தொடர்ந்து போராடு வோம். ஒற்றுமையே பலம் என்றார்.
நிகழ்ச்சியில் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu