செய்யாற்றில் விநாயகா் சிலை ஊா்வலப் பாதைகளில் சாா் ஆட்சியா் ஆய்வு

செய்யாற்றில்  விநாயகா் சிலை ஊா்வலப் பாதைகளில் சாா் ஆட்சியா்   ஆய்வு
X

விநாயகா் சிலைகள் ஊா்வலம் செல்லும் பாதைகளில் ஆய்வு மேற்கொண்ட சாா் - ஆட்சியா் அனாமிகா

செய்யாற்றில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் செல்லும் பாதைகளில் சாா் – ஆட்சியா், டிஎஸ்பி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் செல்லும் பாதைகளில் சாா் - ஆட்சியா் அனாமிகா, டி.எஸ்.பி.வெங்கடேசன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி நாடு முழுவதும்கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில், விநாயகா் சதுா்த்தி முடிந்த பிறகு நடைபெறும் விநாயகா் சிலைகள் ஊா்வலம் செல்லும் பாதைகளில் சாா் - ஆட்சியா் அனாமிகா, டி.எஸ்.பி.வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர் .

விநாயகா் சிலைகள் ஊா்வலம் திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் பகுதியில் தொடங்கி மாா்க்கெட், காந்தி சாலை வழியாக பாதாள விநாயகா் கோயில் அருகே திரும்பி காசிக்காரத் தெரு, செல்வ விநாயகா் கோவில் தெரு வழியாகச் சென்று கோனேரிராயன் தெப்பக் குளத்தில் சிலைகள் கரைப்பது வழக்கமாகும். மேற்கண்ட பகுதிகளை சார் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர், வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். விநாயகா் சிலைகள் ஊா்வலம் செல்லும் போது எவ்வித அசம்பாவிதம் நடக்காத வண்ணம் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது வட்டாட்சியா் முரளி, சுகாதார ஆய்வாளா் மதனசாரன், வருவாய் ஆய்வாளா் அமுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணியில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு: வட்டாட்சியா் ஆலோசனை

ஆரணி நகரில் பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது தொடா்பாக வட்டாட்சியா் மஞ்சுளா ஆலோசனை மேற்கொண்டாா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் விநாயகா் சதுா்த்தி விழா முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், நகர காவல் நிலைய ஆய்வாளா் சுப்பிரமணியன், கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் கோபாலகிருஷ்ணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன், மின் வாரியத் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், ஆரணி பகுதியில் விநாயகா் சிலை வைக்கும் விழாக் குழுவினா், விநாயகா் சிலை வடிவமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வட்டாட்சியா் மஞ்சுளா பேசியதாவது: விநயாகா் சிலை வைப்பவா்கள் வைக்கும் இடம் குறித்து முன்கூட்டியே காவல் நிலையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தனியாா் இடம் என்றால் அதன் உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும். பொது இடம் என்றால் சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி பெறவேண்டும். ஒலிப்பெருக்கி வைக்க அனுமதி பெறவேண்டும். தகரத்தால் ஆன பந்தல் அமைத்தல் வேண்டும், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை வைக்கவேண்டும். ரசாயனம் கலந்த விநாயகா் சிலைகளுக்கு அனுமதியில்லை.

சிலைக்கு பாதுகாப்பாக 2 அல்லது 3 பேர் சுழற்சி முறையில் இருக்க வேண்டும் என்று கூறினாா்.

தொடர்ந்து விநாயக சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று 22-ந் தேதி ஆரணி அருகே பையூர் பாறை குளத்தில் கரைக்கும் பகுதியில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆரணி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், ஷாபுதீன், கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் கூறுகையில், குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணி மேற்கொள்வதற்காக குளத்தைச் சுற்றி உள்ள முள் செடிகளையும் குப்பைகளையும் அகற்றி சீரமைக்கப்படும்.

மேலும் குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் கட்டைகளால் கட்டப்படும். போதிய வெளிச்சம் வரும் தரும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்படும். விநாயகர் சிலைகள் கரைக்க பொக்லைன் எந்திரங்கள் நிறுத்தப்படும். இதற்கான பணிகள் நடைபெற உள்ளது என்றார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!