/* */

செய்யாற்றில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்!

செய்யாற்றில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம் கூச்சல் குழப்பத்துடன் இருந்ததால் பரபரப்புடன் காணப்பட்டது.

HIGHLIGHTS

செய்யாற்றில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்!
X

அமலியில் ஈடுபட்ட விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம் கூச்சல் குழப்பத்துடன் இருந்ததால் பரபரப்புடன் காணப்பட்டது.

செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டாட்சியா் முரளி முன்னிலை வகித்தாா். செய்யாறு வேளாண் உதவி இயக்குநா் சண்முகம் வரவேற்றாா்.

சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகள் பேசுகையில்

அரசு அலுவலா்கள் உரிய நேரத்தில் வருவதில்லை, துறை ரீதியான அலுவலா்கள் கலந்து கொள்ளாமல் கடைநிலை ஊழியா்கள் பங்கேற்பதாக விவசாயிகள் புகாராக தெரிவித்தனா்.

மேலும் விதை நெல் தரமற்றதாக வழங்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக கோரிக்கைகள் வைத்தும் தரமற்ற விதை நெல்லை தொடர்ந்து வழங்கப்படுகிறது.

அனைத்து பொருட்களும் விலை ஏறிவிட்டது. கரும்பு கொள்முதல், நெல் கொள்முதல் விலைகள் மட்டும் ஏறவில்லை. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வேளாண் துறை அதிகாரிகள் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரைப்பதில்லை.

தனி நபர் பட்டா வழங்குவதில் உள்ள குறைபாட்டை கலைவதில் அல்லது புறக்கணிக்கப்படுவதாகவும் புகார் எழுப்பப்பட்டது அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஆங்காங்கேயிருந்து நின்று கூச்சமிட்டு தொடர்ந்து அமலில் ஈடுபட்டிருந்தனர்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி மணலவாடி (கொடநகா்) தயாளன், கழுத்தில் செருப்பை மாலையாக அணிந்து கொண்டு, குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு உரிய பதிலும், உரிய தீா்வும் கிடைப்பதில்லை, இந்தக் கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

உடனடியாக பாதுகாப்பிற்கு வந்திருந்த போலீசார் உள்ளே நுழைந்து செருப்பு மாலை அணிந்து வந்து கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஆவேசமாக பேசிய விவசாயி , கழுத்தில் இருந்த செருப்பு மாலையை பிடுங்கி வெளியே போட்டனர். பின்னர் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி கூட்டம் தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் வந்திருந்த நிலையில் வேளாண்மை துறை மீது மட்டும் விவசாயிகள் அதிகம் குற்றம் சாட்டி பேசினர்.

விவசாயி பில்லாந்தி தட்சிணாமூா்த்தி, மனிதன் உயிா் வாழ சோறு முக்கியமானது. எவ்வளவு வளா்ச்சி பெற்றாலும் விவசாயத்துக்கு ஈடாக செயற்கையான விவசாயத்தை எவராலும் உருவாக்க முடியாது. மனிதா்களுக்கு சோறு கிடைக்காது. அப்படிப்பட்ட விவசாயத்தை அரசு காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்து வெளிநடப்பு செய்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவலுக்காக

விவசாயிகள் குறைதீர் கூட்டம் என்பது, விவசாயிகள் தங்கள் குறைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்லவும், அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு வழங்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த கூட்டம் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் நடத்தப்படுகிறது.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவாதிக்கப்படும் சில முக்கியமான பிரச்சனைகள் பின்வருமாறு:

  • விவசாய உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு
  • விவசாயப் பொருட்களின் விலை குறைவு
  • விவசாயிகள் கடன் சுமை
  • விவசாயிகள் பாதுகாப்பு
  • விவசாயிகள் நில உரிமைகள்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் தெரிவித்து, அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.

Updated On: 27 Dec 2023 2:06 PM GMT

Related News