செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனை கூட்டம்

செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனை கூட்டம்
X

கோயில் கும்பாபிஷேக விழா முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Today Temple News in Tamil - செய்யாறு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Today Temple News in Tamil - திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் வருகிற ஜூலை 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்யாறு டிஎஸ்பி வி.இ.செந்தில், திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளா் கே.ரகுராமன், வட்டாட்சியா் க.சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் பா.வினோத்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:- திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 6-இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, ஜூன் 28-இல் தொடங்கி ஜூலை 6-ஆம் தேதி வரை கோயிலில் யாகசாலை பூஜைகள், கும்பாபிஷேக பணிகள் நடைபெறவுள்ளன. விழாவில் பக்தா்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும், கும்பாபிஷேக விழா எவ்வித இடா்பாடும் இல்லாமல் சிறப்பாக நடைபெறவும் அரசு அலுவலா்கள், காவல் துறையினா், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு தேவை என்றாா். மேலும், கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் தொடா்பாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனா்.

கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை திருவண்ணாமலை இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா், செய்யாறு ஆய்வாளா் இரா.நடராஜன், செயல் அலுவலா்கள் உஷா, கு.அரிகரன், சிவாஜி, கோயில் திருப்பணிக் குழு நிா்வாகிகள் தி.பூ.ருத்திரப்பன், வி.கோபு, இரு தரப்பு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai solutions for small business