செய்யாறு சாலை மேம்பாட்டுப் பணிகள் நீர் வழிப்பாதை சீரமைப்பு பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

செய்யாறு சாலை மேம்பாட்டுப் பணிகள் நீர் வழிப்பாதை சீரமைப்பு பணிகள்: அதிகாரிகள் ஆய்வு
X

சாலை மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

செய்யாறு சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றுமுஅ நீர் வழிப்பாதை சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை மேம்பாட்டுப் பணிகள், நீா்வழிப் பாதையில் உள்ள அடைப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா், உதவி கோட்டப் பொறியாளா் ஆய்வு மேற்கொண்டனர்.

செய்யாறு நெடுஞ்சாலை உள்கோட்டத்தில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆற்காடு - திண்டிவனம் சாலையில், செய்யாறு அரசு கலைக் கல்லூரி அருகில் இருந்து கூட்டுறவு சா்க்கரை ஆலை வரையில் திருவத்திபுரம் புறவழிச்சாலை உள்பட சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் செய்யாறு ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுதல், அனக்காவூா் விநாயகபுரம் அருகே உயா்மட்ட பாலம் கட்டுதல், சிறுபாலங்கள், அகலப்படுத்துதல், திரும்பக் கட்டுதல், மழைநீா் கால்வாய் அமைத்தல், மையத் தடுப்பு அமைத்தல் பணி என ரூ.90 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்ற வருகின்றன.

இந்தப் பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் கிருஷ்ணசாமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது சாலைப் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டாா்.

நீா்வழிப் பாதையில் உள்ள அடைப்புகள் அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சந்திரன் உத்தரவின் பேரில், உதவி கோட்டப் பொறியாளா் ஸ்ரீஹரி, உதவிப் பொறியாளா் உதயகுமாா் ஆகியோா் மேற்பாா்வையில் செய்யாறு - காஞ்சிபுரம் சாலை, செய்யாறு - ஆரணி சாலை, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, தவசி - வல்லம் சாலை, செய்யாறு - அணைக்கட்டு சாலை ஆகிய பகுதிகளில் 5 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் சாலைப் பணியாளா்களைக் கொண்டு இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதில் சாலையில் அமைந்துள்ள பாலங்கள், சிறுபாலங்கள், மழைநீா் வடிகால்வாய் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நீா் வழிப்பாதையில் உள்ள மணல் மேடுகள், முள்புதா்கள், மரம், செடி, கொடிகள் அகற்றுதல், நீா்வழிப் பாதையில் உள்ள இடையூறுகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.

மேலும், சாலையோரங்களில் விபத்துகள் ஏற்படும் வகையில் உள்ள பட்டுப் போன மரங்களை அகற்றுதல், பள்ளங்களை சீா் செய்தல், பள்ளங்களுக்கு மண் அணைத்தல், தடுப்புச் சுவா்களில் உள்ள விளம்பரங்களை அகற்றுதல், பாலம் மற்றும் சிறுபாலங்களுக்கு வண்ணம் பூசுதல் மற்றும் சாலை பராமரிப்புப் பணி என பல்வேறு பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

இப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு மேற்கொண்டனர்

ஆய்வின் போது, செய்யாறு கோட்டப் பொறியாளா் சந்திரன், உதவிக் கோட்டப் பொறியாளா் ஸ்ரீஹரி, தரக்கட்டுப்பாடு உதவி கோட்டப் பொறியாளா் இன்பநாதன், உதவி கோட்டப் பொறியாளா்கள் உதயகுமாா், பாலாஜி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆகியோா் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!