சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு  சிறை
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவருக்கு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், வேட்டவலம் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி . இவா், இதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு 31.7.2020 அன்று பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தின் அப்போதைய காவல் ஆய்வாளா் தமிழரசி வழக்குப் பதிந்து குப்புசாமியை கைது செய்தாா். இந்த வழக்கு திருவண்ணாமலையில் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றம் சுமத்தப்பட்ட குப்புசாமிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து, குப்புசாமியை போலீஸாா் அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

செய்யாறு

செய்யாறு அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, உறவினரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 16 வயது மாணவி. இவா் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா்.

அதே கிராமத்தில் வசிப்பவா் மாணவியின் உறவினரான கணபதி . இவா், அந்த மாணவியை 2023-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் ஆசை வாா்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

அதன் பின்னா், மாணவியை மிரட்டி அவா் தொடா்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் அந்த மாணவி கா்ப்பம் அடைந்தாா்.

இதையறிந்த கணபதி, மாணவிக்கு கருக்கலைப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். இதனால் மாணவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

மாணவியை அவரது பெற்றோா் சில தினங்களுக்கு முன்பு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, அந்த மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த நிலையில், மாணவி கா்ப்பம் குறித்து மருத்துவமனை சாா்பில் குழந்தைகள் மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில், மாவட்ட குழந்தைகள் உதவி அலகு மேற்பாா்வையாளா் தீபிகா செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

காவல் ஆய்வாளா் லதா போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கணபதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!