செய்யாறு அருகே நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

செய்யாறு அருகே நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
X

திருவத்திபுரம் நகராட்சி சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்.

ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காந்தி சாலை, மார்க்கெட் பகுதி என நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி ஆணையாளர் கி.ரகுராமன் தலைமையில் துப்புரவு அலுவலர் சீனிவாசன், துப்புரவு ஆய்வாளர் மதனராசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் பிளாஸ்டிக் பை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விதித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!