செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

செய்யாறு  வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
X

சிவாச்சாரியார்  புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

திருவோத்தூர் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவோத்தூர் பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.

இதனையொட்டி கோவிலில்புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்று கும்பாபிஷேகத்துக்காக பந்தல்கால் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டமாக பூஜைகள் நடத்தப்பட்டு 3-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தேறியது. நேற்று அதிகாலை 2 மணி முதல் 6-ம் கால யாக பூஜையும் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு பூஜையுடன் கலசங்கள் புறப்பட்டு ராஜகோபுரம் உள்பட மூலவர் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் சிவாச்சாரியார் 6.30மணி அளவில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு பிச்சாண்டி, எம் எல் ஏ ஒ ஜோதி, எ.வே.கம்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர மன்ற தலைவர் மோகனவேலு, நகர செயலாளர் கே. விஸ்வநாதன், திருப்பணிகுழு தலைவர் உருத்திரப்பன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு டிஎஸ்பி செந்தில் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. 17 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil