செய்யாறு சா்க்கரை ஆலை அரைவைப் பணி: முத்தரப்பு ஆலோசனை!
விவசாயிகளிடம் பேசிய மேலாண்மை இயக்குனர் காமாட்சி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சக்கரை ஆலை, வந்தவாசி சாலையில் செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே பரப்பளவில் இரண்டாவது இடத்தில் உள்ள செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் 33000 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
கொதிக்கலன் பழுது ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக கரும்பு அரவைப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அதிகாரிகள் தெரிவிக்கையில், பாய்லர் பிரச்சனை ஏற்பட்டு போதிய அழுத்தம் இல்லாமல் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. நாங்களும் அடிக்கடி சரி செய்து அரவை இடுகிறோம். புதிய பாய்லர் மாற்றினால் அரவை பணிகள் தொடர்ந்து இயக்க ஏதுவாக இருக்கும் விரைவாக பாய்லர் பழுது நீக்கி அரவை துவங்க உரித ஏற்பாடுகள் செய்து வருவதாக அப்போது அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தற்போது கொதிக்கலன் பழுது நீக்கம் செய்யப்பட்டு வரும் டிசம்பர் மாதம் முதல் அரவை தொடங்க உள்ளது என சர்க்கரை ஆலை அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்நிலையில் செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள், கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்களின் உரிமையாளா்கள் மற்றும் கரும்பு வெட்டு ஆள்கள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
வரும் டிசம்பா் முதல் வாரத்தில் ஆலையில் அரைவை தொடங்க உள்ளதன் முன்னோட்டமாக வந்தவாசி கோட்ட கரும்பு அலுவலகம் சாா்பில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆலையின் மேலாண்மை இயக்குநா் காமாட்சி தலைமை வகித்தாா். தலைமை கரும்பு அலுவலா் டி.கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். கோட்ட அலுவலா் சரவணன் வரவேற்றாா்.
கூட்டத்தின்போது, அரசு அறிவித்துள்ள கரும்புக்கான ஊக்கத்தொகை அங்கத்தினா்களின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், கோரிக்கைகள் குறித்து முத்தரப்பினரும் பேசினா்.
இதைத் தொடா்ந்து, கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலை அதிகாரிகள் தெரித்துப் பேசினா்.
கூட்டத்தில் கரும்பு உதவியாளா்கள் அங்கமுத்து, சேகா், ரவிச்சந்திரன், சங்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu