செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை துவக்கம்

செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை துவக்கம்
X

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி

செய்யார் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை முதல் துவங்குகிறது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்து முதல்வர் கலைவாணி கூறியதாவது,

2024 -2025 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான இளநிலை மாணவர்கள் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு (பொது) ஜூன் 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி முடிய நடைபெற உள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர் காலை 9 மணிக்கு வர வேண்டும் அனைத்து பாடப்பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.

290 முதல் 268 மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்கள் ஜூன் 24ஆம் தேதியும்,

267 முதல் 249 வரை உள்ள மதிப்பெண் பெற்றவர்கள் ஜூன் 25ஆம் தேதியும்,

248 முதல் 235 வரை மதிப்பெண் பெற்றவர்கள் ஜூன் 26 ஆம் தேதியும் கலந்து கொள்ள வேண்டும்.

இளங்கலை ஆங்கில பாடப்பிரிவிற்கு மட்டும் 60 முதல் 55 வரை மதிப்பெண் பெற்றவர்கள் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

கல்வி கட்டணமாக பிஏ, பிகாம், பிபிஏ பாடப்பிரிவுகளுக்கு ரூபாய் 2241 ம்,பி எஸ் சி பாடப்பிரிவுகளுக்கு ரூபாய் 2261ம், கணினி அறிவியல் மற்றும் பி சி ஏ பாடப்பிரிவுகளுக்கு ரூபாய் 1361ம், கல்வி கட்டணம் செலுத்தவேண்டும். மாணவர்கள் சேர்க்கையின் போது இணையத்தில் பதிவு செய்த விண்ணப்ப நகல், அனைத்து அசல் சான்றிதழ்கள், தலைமை ஆசிரியரிடம் சான்றோப்பம் பெற்ற மதிப்பெண்பட்டியல், மூன்று புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைகொண்டு வர வேண்டும்.

காலை 9:30 மணிக்கு மேல் வரும் மாணவர்கள், மாணவிகள் கலந்தாய்வில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று செய்யாறு அரசு கலைக் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story