இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு

இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு
X
செய்யாறு அருகே தூசி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.1.50 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள பூனை தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 43), விவசாயி. இவர், காலை ஸ்கூட்டியில் மாங்கால் கூட்ரோட்டில் உள்ள வங்கிக்கு சென்று வங்கியில் இருந்து ரூ.1.50 லட்சம் எடுத்து, பணத்தை ஸ்கூட்டியில் வைத்து விட்டு, அருகில் இருந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்று தனது கணக்கை சரி பார்த்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மேநல்லூர் கிராமம் வழியாக தனது கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, குழந்தைகளுக்கு பிஸ்கெட் வாங்குவதற்காக கடையில் நிறுத்தியுள்ளார். பிஸ்கெட் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டியில் வைக்கும் போது சீட் கவரில் உள்ளே வைத்திருந்த ரூ.1.50 லட்சம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நடராஜன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், ரவிச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்