நகராட்சி உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்த அதிமுக ஆலோசனை கூட்டம்

நகராட்சி உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்த அதிமுக ஆலோசனை கூட்டம்
X

சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ,எம்எல்ஏ , தேர்தலை சந்திப்பது குறித்து அதிமுகவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

செய்யாறில் நகராட்சி உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அதிமுகவினருக்கு ஆலோசனை வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்ற நகராட்சி உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று அதிமுகவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தேர்தலை சந்திப்பது குறித்து அதிமுகவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஏ.ஜனார்த்தனன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் , ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வெம்பாக்கம் ஒன்றியம் அசனமாபேட்டை கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழாவில் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ,ஆகியோர் எம்ஜிஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பும் மற்றும் அன்னதானமும் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!