தலைமை ஆசிரியா்களுக்கான மீளாய்வுக் கூட்டம்

தலைமை ஆசிரியா்களுக்கான மீளாய்வுக் கூட்டம்
X

செய்யாற்றில் நடைபெற்ற  தலைமை ஆசிரியா்களுக்கான மீளாய்வுக் கூட்டம் 

செய்யாறு கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையில் பள்ளி தலைமை தலைமை ஆசிரியா்களுக்கான மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை அடுத்த அனக்காவூா் ஒன்றியத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அனக்காவூா் வட்டார வள மையத்தில் நடைபெற்ற இந்த மீளாய்வுக் கூட்டத்துக்கு செய்யாறு கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயகாந்தம் தலைமை வகித்து பேசினார்.

தொடர்ந்து பள்ளிகள் திறப்புக்கான ஆயத்த பணிகள், பள்ளி வளாக தூய்மை பணிகள், பள்ளிகளுக்கு அதிவேக இணைய வசதி பெறுதல், மாணவர் சேர்க்கை, மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்ட பொருட்கள் தயாராக இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது பணியை அர்ப்பணிப்புடன் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் கிருஷ்ணன், வட்டார கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் , கல்வி அலுவலர்கள், ஆகியோர் தலைமை ஆசிரியர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை வழங்கினர்.

கூட்டத்தில் அனக்காவூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 90 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நிறைவு

வந்தவாசியில் மாற்றம் கல்வி மையம் சாா்பில் நடைபெற்று வந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நிறைவடைந்தது.

வந்தவாசி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் பயிற்சி வகுப்பு கடந்த பிப் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

வாரம்தோறும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்கள் என மொத்தம் 50 நாள்கள் பயிற்சி நடைபெற்றது. இதில் 32 மாணவா்கள் பங்கேற்றிருந்தனா்.

இந்நிலையில் இந்த பயிற்சி வகுப்பானது இன்றுடன் நிறைவடைந்தது. பயிற்சி வகுப்பின் நிறைவு விழா வந்தவாசி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் வாசு, சிஐடியு மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் பயிற்சி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

மேலும் விழாவில் கல்வி மைய நிர்வாகிகள் மற்றும் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!