/* */

செய்யாறில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செய்யாற்றில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

செய்யாறில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

செய்யாறில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்யாற்றில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் முன்னிலை வகித்தார்.மண்டல பொறுப்பாளர் பாலசுந்தரம், மண்டல துணைத் தலைவர் பாண்டியராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

ஓய்வு பெறும் நாளில் தொழிலாளர்களுக்கு அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும். 80 மாதத்திற்கான டி. ஏ. நிலுவையை உடனே வழங்க வேண்டும்.

குடும்ப ஓய்வூதியம் பெறும் தாய்மார்களின் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.பணியின் போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

நிகழ்ச்சியில் ஏராளமான அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல சங்கத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 July 2022 2:09 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  'அப்பா' எனும் ஆத்மாவை உணருங்கள்..! உங்கள் மூச்சாக இருப்பவர் அவரே..!
 2. ஆன்மீகம்
  நெற்றிக்கண் உடைய சிவனே..! வெற்றியருள்வாய் எமக்கே..!
 3. லைஃப்ஸ்டைல்
  நல்ல நட்பு என்பது ஒரு நூலகம்..! நட்பின் வரிகள்..!
 4. வானிலை
  5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை..!
 5. க்ரைம்
  பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை
 6. உலகம்
  துபாயில் கனமழை : வெள்ளப்பெருக்கில் மூழ்கிய வாகனங்கள்..!
 7. ஈரோடு
  ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரம்
 8. இந்தியா
  தேசிய கீதம் வெறும் வரிகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது நம் தேசத்தின்...
 9. லைஃப்ஸ்டைல்
  Leukemia meaning in Tamil -இரத்தம், எலும்பு மஜ்ஜையை சிதைக்கும்...
 10. திருவள்ளூர்
  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் கிராம மக்கள்...