ரூபாய் 1.85 கோடியில் திட்டப்பணிகள்: செய்யாறு ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
செய்யாறு ஒன்றியக்குழு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 53 கிராமங்களில் ரூபாய் 1.85 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
செய்யாறு ஊராட்சி ஒன்றிய கூட்டம் அதன் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செய்யாறு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐம்பத்தி மூன்று கிராமங்களில் 15வது நிதிக்குழு மானிய திட்டம் பொது நிதி மூலம் 1.85 கோடியில் சிமெண்ட் சாலைகள், நெல் கலங்கள், தரை பாலங்கள், கழிவுநீர் கால்வாய், குடிநீர் குழாய் விரிவாக்கம், சிறு பாலங்கள், உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த திட்டப்பணிகளை 10 நாட்களுக்கு தொடங்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆகியோரிடம் கலந்தாலோசித்து, செய்யாறு ஒன்றியத்துக்கு தேவையான அனைத்து திட்டப் பணிகளும் நிறைவேற்றப்படும் என்று ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu