நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை

நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை
X

நெல் தூற்றும் எந்திரத்திற்கு பூஜை செய்த விவசாயிகள்.

செய்யாறு தொகுதியில் நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து பாராசூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் தூற்றும் எந்திரத்திற்கு பூஜை செய்து விவசாயிகள் வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள நெல் விளைச்சல் மூலம் சுமார் 3 லட்சம் வரை டன் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. டெல்டா பகுதியான தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் மூலம் 90 சதவீதம் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் அப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் டெல்டா மாவட்டத்தில் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டெல்டா மாவட்டத்தில் உள்ளது போல நெல் உற்பத்தி மற்றும் அரிசி உற்பத்தியில் முதலிடத்தில் இருந்து வரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும், மாவட்டத்திலேயே நெல் விளைச்சலில் முதலிடத்தில் உள்ள செய்யாறு தொகுதியில் மட்டும் (செய்யாறு - வெம்பாக்கம் வட்டங்கள்) வரும் சம்பா பருவத்தில் குறைந்த பட்சம் 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும், சம்பா பருவத்தில் அரசு நேரடி கொள்முதல் தொடர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

நிகழ்ச்சியில் மேட்டூர் மண்ணு, அகத்தேரிப்பட்டு கிருஷ்ணன், மைனர்.சக்கரபாணி, மதுரை குணசேகரன், பெருங்களத்தூர் ரகுபதி நாயுடு மற்றும் விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!