செய்யாறு அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 40.75 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு

செய்யாறு அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 40.75 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு
X

ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்தனர் வருவாய்த் துறை அதிகாரிகள்.

செய்யாறு அருகே ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள மேல்மா கிராமத்தில் ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்புடைய சொத்துக்களை கணினியில் பதிவேற்றம் செய்வதற்காக கோயில் பதிவேடுகளை ஆராய்ந்தபோது பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 40. 75 ஏக்கர் நிலம் இருப்பது தெரியவந்தது.

அறநிலையத்துறை மாவட்ட இணை ஆணையர் கஜேந்திரன் , உதவி ஆணையர் ஜோதிலட்சுமி ஆகியோர் நிலத்தை மீட்க உத்தரவிட்டனர்.

அதன்பேரில் கோயில் நில எடுப்பு தனி வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, ஆய்வாளர் நடராஜ் ,நில அளவைகள் சிவகுமார், சின்ராஜ் அருணாச்சலம் ,கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கோயில் அர்ச்சகர் , கிராம மக்கள் முன்னி,லையில் நிலத்தை அளவீடு செய்து கற்களை நட்டனர்.


Tags

Next Story
ai in future agriculture