செய்யாற்றில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை சபாநாயகர்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்தாா். செய்யாறு எம்.எல்.ஏ ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் பாா்வதி சீனிவாசன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளா் தரணிவேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சென்னை மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) தேவேந்திரன் வரவேற்றாா்.
முகாமில் சிறப்பு விருந்தினராக சட்டப் பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பங்கேற்று, தோவு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள இளைஞா்களின் நலனை கருத்தில் கொண்டு, கலைஞரின் நூற்றாண்டு விழாவை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் வேலைவாய்ப்பு துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மாவட்டங்கள் தோறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெறும் வகையில் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் வாயிலாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் சிறிய மற்றும் பெரிய அளவில் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. இந்த அரசு பதவி ஏற்றது முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு பெரிய அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியான 100 வேலைவாய்ப்பு முகாமில் தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மாநில கல்லூரியில் கடந்த ஜூலை மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இதுவரை தமிழகம் முழுவதும் 90 தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், 436 மாற்றுத்திறனாளிகள் உள்படி 37,247 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
செய்யாறில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 91-ஆவது சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 102 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 2,156 பேர் கலந்துக் கொண்டதில் 549 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இளைஞர்கள் தங்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த வேலை வாய்ப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷிணி, கூடுதல் ஆட்சியா் ரிஷப், நகா்மன்றத் தலைவா் மோகனவேல், நகராட்சி துணைத் தலைவா் பேபிராணி பாபு, ஒன்றியக்குழுத் தலைவா்கள் திலகவதி ராஜ்குமாா்(அனக்காவூா்), ராஜி(வெம்பாக்கம்), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் யோகலட்சுமி, ஓன்றிய கவுன்சிலா் ஞானவேல், ஒன்றிய செயலாளா்கள் சீனிவாசன், சங்கா், தினகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu